அமெரிக்க தூதரகத்துக்கு முன்பாக இன்று போராட்டம்!
வெனிசுலாவுக்கு எதிரான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கையைக் கண்டித்து கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்துக்கு முன்பாக இன்று (05) போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
முன்னிலை சோசலிசக் கட்சியாலேயே இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை நேரப்படி இன்று மாலை 4 மணிக்கு போராட்டம் நடத்தப்படும் என சமூகவலைத்தள பிரச்சாரமொன்றில் மேற்படி கட்சியின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வெனிசுலா விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீட்டை நிறுத்துமாறும், இலத்தீன் அமெரிக்காவில் பரந்த தலையீடுகளை நிறுத்துமாறும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஜே.வி.பியின் இருந்து பிரிந்து சென்ற குழுவினராலேயே முன்னிலை சோசலிசக் கட்சி உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக அக்கட்சி தொடர்ந்து போராடிவருகின்றது.






