இஸ்ரேல் அரசுக்கு எதிராக போராட்டம்: 12 பேர் கைது – பணயக் கைதிகள் மீட்பு கோரிக்கை

டெல் அவிவில் இஸ்ரேலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காசாவில் நடைபெறும் போரினை நிறுத்தி, ஹமாஸ் வசமுள்ள பணயக் கைதிகளை மீட்டுவர வேண்டும் என வலியுறுத்தி, இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்கள், நகரின் முக்கிய வீதிகளில் போக்குவரத்தை முடக்கும் வகையில் டயர்களை அடுக்கி தீவைத்தனர். இந்த போராட்ட நடவடிக்கைகளினால் நகரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டத்தை கட்டுப்படுத்த முயன்ற பொலிஸார், அமைதியை பாதித்ததாக 12 பேரை கைது செய்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் அரசின் புள்ளிவிவரங்களின்படி, ஹமாஸ் வசமுள்ள சுமார் 50 பணயக் கைதிகளில் 20 பேர் மட்டுமே உயிருடன் இருக்கலாம் என சந்தேகம் உள்ளது. இந்த நிலைமை, பொதுமக்களிடையே ஆழ்ந்த கவலையையும் கோபத்தையும் உருவாக்கி இருக்கிறது.
பணயக் கைதிகள் மீட்பு மற்றும் போர்நிறைவு தொடர்பான அரசின் நடவடிக்கைகள் குறித்து வெளிப்படையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், இந்தப் போராட்டங்கள் மேலும் தீவிரமாகும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.