காலி சிறைச்சாலையை இடமாற்றம் செய்ய ஆலோசனை
காலி(Galle) சிறைச்சாலையை அதன் தற்போதைய இடத்திலிருந்து வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான திட்டம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இன்று விவாதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குழுவின் இணைத் தலைவர் நலின் ஹேவகே(Nalin Hewage), அதிக வணிக மதிப்பைக் கொண்டுள்ள சிறைச்சாலை அமைந்துள்ள நிலம் காலி நகரத்தின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எதிர்காலத்தில் கைதிகளை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் செயல்முறை நிறுத்தப்பட்டு டிஜிட்டல் முறையில் நடைபெறும் எனவே, சிறைச்சாலை சற்று தொலைவில் அமைந்திருந்தாலும், அது ஒரு பெரிய பிரச்சினையாக இருக்காது என்று அவர் தெரிவித்துள்ளார்.





