இலங்கை

பஸ் கட்டணத்திற்கு இணையாக ரயில் கட்டணங்களை உயர்த்த முன்மொழிவு!

ரயில்வே திணைக்களம் அதிகாரம் வழங்கியதன் பின்னர் தற்போது நடைமுறையில் உள்ள சீசன் டிக்கெட் முறை ரத்து செய்யப்படும் என நாளிதழ் ஒன்று செய்தி வெளியாகியுள்ளது.

இதன்காரணமாக ரயில் கட்டணமும் உயரும் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே திணைக்களம் அதிகாரம் வழங்கியதன் பின்னர் இந்த சீர்திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் போக்குவரத்து அமைச்சு  கவனம் செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி, ஏனைய அனைத்துக் கட்டணங்களையும் தற்போதைய குறைந்தபட்ச புகையிரதக் கட்டணமான 20 ரூபாவில் இருந்து பஸ் கட்டணத்திற்கு இணையான வீதத்தினால் உயர்த்துவதற்கு போக்குவரத்து அமைச்சு முன்மொழிந்துள்ளதாக கூறப்படுகிறது.

பருவச் சீட்டு முறையை இல்லாதொழிப்பதன் மூலம் பெருமளவு வருமானத்தைப் பெற முடியும் எனவும், அந்த வருமானத்தில் இருந்து ஊழியர்களின் சம்பளத்தை வழங்க முடியும் எனவும் இக்கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக குறித்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஏறக்குறைய 19,000 ஊழியர்களைக் கொண்ட ரயில்வே திணைக்களத்திற்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு ரயில்வே திணைக்களத்திற்குக் கிடைக்கும் வருமானம் போதுமானதாக இல்லை என்பதே இந்த முன்மொழிவுகளுக்குக் முக்கிய காரணம் எனவும் கூறப்பட்டுள்ளது.

(Visited 3 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்