ஹேஸ்டிங்ஸில் குழாய் உடைப்பு: கிறிஸ்மஸ் தினத்தில் நூற்றுக்கணக்கான வீடுகளில் குடிநீர் விநியோகம் பாதிப்பு
பிரித்தானியாவின் ஹேஸ்டிங்ஸ் (Hastings) பகுதியில், பிரதான குழாய் உடைப்பு காரணமாக கிறிஸ்மஸ் தினமான நேற்று நூற்றுக்கணக்கான வீடுகளில் நீர் விநியோகம் முற்றாகப் பாதிக்கப்பட்டது.
ஃபேர்லைட் (Fairlight) நீர்த்தேக்கத்தில் நீர் மட்டம் மிகக் குறைந்த நிலையை எட்டியதால் இந்தத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நீர் (Southern Water) நிறுவனம் தெரிவித்துள்ளது. பெல்ஹாம் பிளேஸ் (Pelham Place) பகுதியில் அவசரகால போத்தல் குடிநீர் விநியோக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
எனினும், 18 ஆண்டுகளுக்கு முன்பே ‘பழையது’ என அறிவிக்கப்பட்ட குழாய்களை மாற்றாததே இந்தத் தொடர் பாதிப்புகளுக்குக் காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹெலினா டோலிமோர் (Helena Dollimore) கடுமையாகச் சாடியுள்ளார்.
தற்போது டேங்கர் லாரிகள் மூலம் கட்டமைப்பைச் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்கள் நீரினைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.





