இலங்கை செய்தி

நீடிக்கும் வறட்சி!! நீர்மின் உற்பத்தி வெகுவாக குறைந்தது

நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர்மின் உற்பத்தி குறைந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நேற்றைய நீர் மின் உற்பத்தி 11 வீதமாக குறைந்துள்ளதாக சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், தற்போது நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக மின்சார பாவனை கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, ஒரு வார நாளில் வழக்கமாக 43 முதல் 44 ஜிகாவாட் மணிநேரமாக இருந்த மின் நுகர்வு தற்போது சுமார் 51 ஜிகாவாட் மணிநேரமாக அதிகரித்துள்ளது என்று தெரிவித்தார்.

இந்த தொகையில், தலா 4 ஜிகாவாட் மணிநேரம் காற்று மற்றும் சூரிய சக்தி மூலம் சந்திக்கப்படுகிறது. எஞ்சிய 35 ஜிகாவாட் மணிநேரத்தை அனல் மின் நிலையங்கள் பூர்த்தி செய்யும் என இங்கு தெரிவிக்கப்பட்டது.

மின்சார சபைக்கு சொந்தமான நீர்த்தேக்கங்களில் நீர் வழங்கல் சபையின் அறிவுறுத்தல்களுக்கு அமைய நீர் முகாமைத்துவம் செய்யப்பட்டு வருவதாக சிரேஷ்ட பேச்சாளர் தெரிவித்தார்.

நீர் மின்சார உற்பத்தியை அதிகரித்தால் கொழும்பு, கண்டி உள்ளிட்ட பல முக்கிய நகரங்களுக்கு குடிநீரை வழங்க முடியாத நிலை ஏற்படும் என இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

(Visited 6 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை