சந்திரபாபு நாயுடு கைது: நெல்லூர் மாவட்டம் ராஜமுந்திரி பகுதியில் 144 தடை உத்தரவு!
திறன் மேம்பாட்டு கழகத்தில் ரூ.317 கோடி மோசடி செய்தது தொடர்பான வழக்கில் ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு (73) நேற்று அதிகாலை மாநில சிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் இன்று (செப்டம்பர் 10) விஜயவாடா ஊழல் தடுப்பு பிரிவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது சந்திரபாபு தரப்பில் ஆஜரான வக்கீல் வாதிட்டதாவது: ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு இருந்த போது இந்த மோசடி நடந்ததாக கூறப்படுகிறது. நிதி முறைகேடு புகார்களை முறையாக விசாரிக்க வேண்டும். இதற்காக முன்னாள் முதல்வர் மீது வழக்கு போடுவது சரியல்ல. இவ்வாறு அவர் வாதிட்டார்.
அப்போது அரசியல் காரணங்களுக்காக அவர் மீது பொய் புகார்கள் கூறப்பட்டு, அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை. அவரது குற்றச்சாட்டுகளை நிராகரிக்க வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு கூறினார். இதனிடையே விசாரணைக்கு சந்திரபாபு நாயுடு ஒத்துழைக்கவில்லை என போலீசார் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கிழக்கு கோதாவரி மாவட்டம், நெல்லூர் மாவட்டம் ராஜமுந்திரி பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.