பாலஸ்தீன ஆதரவு ஆர்வலர் மஹ்மூத் கலீலை சிரியா அல்லது அல்ஜீரியாவிற்கு நாடு கடத்த உத்தரவு
அமெரிக்காவில் உள்ள ஒரு குடியேற்ற நீதிபதி, புகழ்பெற்ற கொலம்பியா பல்கலைக்கழகத்தில் காசா மீதான இஸ்ரேலின் போருக்கு எதிரான கடந்த ஆண்டு போராட்டங்களில் முன்னணிப் பங்காற்றிய பாலஸ்தீன ஆதரவு ஆர்வலர் மஹ்மூத் கலீலை அல்ஜீரியா அல்லது சிரியாவிற்கு நாடு கடத்த உத்தரவிட்டுள்ளார்.
லூசியானா குடியேற்ற நீதிபதி ஜேமி கோமன்ஸ் பாலஸ்தீன ஆதரவு ஆர்வலர் மஹ்மூத் கலீலை நாடுகடத்த இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
கலீல் “குடியேற்ற செயல்முறையைத் தவிர்ப்பதற்காக மட்டுமே வேண்டுமென்றே முக்கிய உண்மைகளை தவறாக சித்தரித்தார்” என்று கோரி நீதிபதி தீர்ப்பை இறுதி செய்தார்.
பாலஸ்தீன வம்சாவளியைச் சேர்ந்த நிரந்தர அமெரிக்க குடியிருப்பாளரான கலீல், அவர் படித்த கொலம்பியா பல்கலைக்கழகத்தில் 2024 காசா போர் போராட்டங்களின் போது ஒரு முக்கிய நபராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





