ஏமன் மற்றும் ஹவுதி இடையே கையெழுத்தான கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம்
ஏமன்(Yemen) அரசாங்கமும் ஹவுதி(Houthi) குழுவும் கைதிகளை விடுவிப்பதற்கான ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
2014ல் தொடங்கிய அரசாங்கத்திற்கும் ஹவுத்திகளுக்கும் இடையிலான மோதலில் ஒரு மத்தியஸ்தராக இருந்த ஓமானின்(Oman) தலைநகரான மஸ்கட்டில்(Muscat) கிட்டத்தட்ட இரண்டு வார பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் நிறைவு பெற்றதாக ஏமனுக்கான ஐ.நா. தூதர் ஹான்ஸ் கிரண்ட்பெர்க்(Hans Grundberg) தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மஸ்கட்டில் உள்ள ஹவுதி தூதுக்குழுவின் அதிகாரி அப்துல்காதர் அல்-மோர்டாடா(Abdulqader al-Mortada),” 1,700 பேரை உள்ளடக்கிய ஒரு பெரிய அளவிலான கைதிகள் பரிமாற்றத்தை செயல்படுத்துவதற்கு இன்று நாங்கள் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம், அதற்கு ஈடாக 7 சவுதிகள் மற்றும் 23 சூடானியர்கள் உட்பட 1,200 கைதிகள் விடுவிக்கப்பட உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.





