அமெரிக்கவாசி என்பதை உறுதி செய்த இளவரசர் ஹரி

பிரித்தானிய மன்னர் சார்ல்ஸின் மகன் இளவரசர் ஹரி, இப்போது அமெரிக்கவாசி என்பதை உறுதிசெய்திருக்கிறார்.
4 ஆண்டுகளுக்கு முன் அவர், மனைவி மேகனுடன் அமெரிக்காவின் தென் கலிபோர்னியாவில் வசிக்க ஆரம்பித்தார்.
இளவரசர் ஹரி தற்போது அமெரிக்கவாசி என்பதை இளவரசரின் பயண நிறுவனம் பிரித்தானிய அதிகாரிகளிடம் அதிகாரபூர்வமாகத் தெரிவித்தது.
ஹரியும் மேகனும் ஊடகத் தொழில்துறையில் ஈடுபட அரச குடும்ப கடமைகளைக் கைவிட்டு அமெரிக்காவுக்குச் சென்றனர்.
அரச குடும்பக் கடமைகளைக் கைவிட்டதிலிருந்து ஹரி அரச குடும்பத்தைக் குறைகூறி வருகிறார்
அமெரிக்கவாசி என்று ஹரி அறிவித்திருப்பது அந்த நிலையை உறுதிப்படுத்துகிறது.
(Visited 23 times, 1 visits today)