ஐரோப்பா

முதன்முறையாக இந்தியா செல்லவுள்ள பிரதமர் ரிஷி: வெடித்துள்ள சர்ச்சைகள்

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், அடுத்த மாதம், அதாவது, செப்டம்பர் மாதம், G20 உச்சி மாநாட்டிற்காக இந்தியா செல்கிறார். இந்த தகவல் வெளியானதுமே கூடவே சில சர்ச்சைகளும் உருவாகியுள்ளன.

பிரித்தானியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில், தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் ஒன்று தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருகின்றன. தற்போது, 12ஆவது சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன.இந்தியா சார்பில் இந்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சரான பியுஷ் கோயல், பிரித்தானியா சார்பில் பிரித்தானிய வர்த்தகச் செயலரான கெமி பேடனாக் ஆகியோர் இந்த பேச்சுவார்த்தைகளில் பங்கேற்று வருகிறார்கள்.

இந்த சூழலில் ரிஷி இந்தியா செல்கிறார். அவரும் இந்த தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகத் தெரிகிறது.அந்த விடயம் தொடர்பில்தான் தற்போது பிரித்தானிய அரசியல்வாதிகள் பிரச்சினை எழுப்பியுள்ளார்கள்.

Akshata Murty: Rishi Sunak's wife is a software heiress who's richer than  royalty | CNN Business

பிரச்சினைக்குக் காரணம், ரிஷி, இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் மருமகன் என்பதுதான். அதாவது, சமீபத்தில் தன் மனைவி அக்‌ஷதா மூர்த்தி தொடர்பில் சர்ச்சை ஒன்றில் சிக்கினார் ரிஷி. ரிஷி பட்ஜெட்டில் அறிவித்த சலுகை ஒன்றின் மூலம், அவரது மனைவியான அக்‌ஷதா பங்குதாரராக உள்ள Koru Kids என்னும் அமைப்பு வாயிலாக அவருக்கு லாபம் கிடைக்கலாம் என்ற கருத்து உருவாகியது. அந்த அமைப்பில் ரிஷியின் மனைவி பங்குதாரராக உள்ள விடயத்தை அவர் மறைத்ததாக பிரித்தானிய அரசியல்வாதிகள் பிரச்சினை எழுப்பினார்கள்.

இப்போது பிரித்தானியாவும் இந்தியாவும் செய்துகொள்ளும் தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தின் வாயிலாகவும் ரிஷியின் மாமனார் குடும்பத்துக்கு லாபம் கிடைக்குமா என்பதை அவர் உறுதிசெய்யவேண்டும் என பிரித்தானிய அரசியல்வாதிகள் குரல் எழுப்பத் துவங்கியுள்ளனர்.எனவே, ரிஷி இந்தியா செல்லும் நிலையில், அவர் இந்த விடயம் தொடர்பான கேள்விகளை எதிர்கொள்ள நேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

(Visited 9 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்