இன்றைய முக்கிய செய்திகள் உலகம் செய்தி

நமீபியாவில் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட உயரிய விருது

கானா, டிரினிடாட் அண்டு டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் ஆகிய நாடுகளுக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த கட்டமாக ஆப்பிரிக்க நாடான நமீபியாவுக்கு சென்றுள்ளார்.

நமீபியாவின் விண்ட்ஹோக்கில் தரையிறங்கிய பிரதமர் மோடியை அந்நாட்டு அதிபர் நெட்டம்போ நந்தி எண்டைட்வா நேரில் வந்து வரவேற்றார்.

பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு பிரதமர் மோடி உற்சாகமாக மேளம் கொட்டி மகிழ்ந்தார்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இது பிரதமர் மோடிக்கு அளிக்கப்படும் 27வது வெளிநாட்டு விருது ஆகும். தற்போதைய சுற்றுப்பயணத்தில் பெறும் 4வது விருது ஆகும்.

அதைத் தொடர்ந்து அந்நாட்டு பாராளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, உலகின் மிகப்பெரிய வைர உற்பத்தியாளர்களில் நமீபியாவும் ஒன்று. இந்தியாவில் மிகப்பெரிய வைர மெருகூட்டல் தொழில் உள்ளது.

அதுவும் எனது சொந்த மாநிலமான குஜராத்தில். வரும் காலங்களில் இரு நாடுகளிடையே உள்ள நட்பு இந்த வைரங்களைப் போலவே பிரகாசிக்கும் என்று நம்புகிறேன் என தெரிவித்தார்.

(Visited 3 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி