அரசியல் இலங்கை செய்தி

பிரதமர் பதவி விலக வேண்டியதில்லை: மஹிந்த

“ பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பதவி விலக வேண்டும் என நான் கூறமாட்டேன்.” – என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச Mahinda Rajapaksa தெரிவித்தார்.

தரம் 6 மாணவர்களுக்குரிய ஆங்கில பாடப்புத்தகத்தில் வயது வந்தோருக்கான இணையத்தளம் ஒன்றின் முகவரி அச்சிடப்பட்டிருந்த விவகாரம் இலங்கை அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கல்வி அமைச்சு பதவியை வகிக்கும் பிரதமர் பதவி விலக வேண்டும் என பல தரப்பினரும் வலியுறுத்திவருகின்றனர்.

இது தொடர்பில் மஹிந்த ராஜபக்சவிடம் வினவப்பட்டது. இதற்கு பதிலளிக்கையிலேயே மஹிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு கூறினார்.

அத்துடன், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முயற்சியெடுத்தாலும், வேலைத்திட்டமென்பது தோல்வி அடைகின்றது எனவும் மஹிந்த குறிப்பிட்டார்.

ஊடகங்களிடம் சிறிது நேரமே கருத்து வெளியிட்ட பின்னர், பிரிதொரு நாளில் பேசுவோம் எனக் குறிப்பிட்டு அங்கிருந்து மஹிந்த ராஜபக்ச விடைபெற்றார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!