வொஷிங்டனில் அவசரநிலை! தேசிய பொலிஸ் படையினரை களமிறக்கிய ஜனாதிபதி டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வொஷிங்டனில் தேசிய பொலிஸ் படையினரை களமிறக்கியுள்ளார்.
தலைநகரில் குற்றங்களையும், வீடில்லாதோரின் எண்ணிக்கையையும் குறைக்க டிரம்ப் உறுதியளித்துள்ளார்.
நேற்று அவர் வொஷிங்டனில் பொதுப் பாதுகாப்பு அவசரநிலையை அறிவித்துள்ளர்.
தேசியக் பொலிஸ் படையின் சுமார் 800 அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
தலைநகரில் முழுமையாகச் சட்டவிரோத சூழல் நீடிப்பதாக டிரம்ப் கூறினார். அந்தக் கூற்றை வொஷிங்டன் மேயர் நிராகரித்தார்.
30 ஆண்டுகளில் இல்லாத அளவு வொஷிங்டனில் குற்றச்செயல்கள் குறைந்திருப்பதாகப் புள்ளிவிவரம் காட்டுகிறது.
(Visited 7 times, 7 visits today)