இலங்கை

அந்நியனாகவும், அம்பியாகவும் மாறும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க : சாணக்கியன் விமர்சனம்!

அதிகாரம் இருக்கும்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அந்நியனாக மாறுவதுடன் ஆட்சியதிகாரம் இல்லாவிட்டால் அம்பியாக மாறுவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு நகரில் உள்ள ஹேமியோபதி வைத்தியசாலைக்கு ஒரு தொகுதி தளபாடங்களை கையளிக்கும் நிகழ்வு இன்று (01.02) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், மேற்படி குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு நகரில் மட்டக்களப்பு மாநகரசபையின் கட்டிடத்தில் எந்தவித அடிப்படை வசதிகளுமின்றி இயங்கிவரும் ஹேமியோபதி வைத்தியசாலைக்கு உதவுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக தனது சொந்த நிதியில் இந்த தளபாடங்கள் வழங்கப்பட்டன.

இது தொடர்பான நிகழ்வு இன்று நடைபெற்றது.வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் பிரவீனா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு வழங்கிவைத்தார்.

இந்த நிகழ்வில் வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் சுகிர்தன்,கிழக்கு மாகாண முன்னாள் காணி ஆணையாளர் குருநாதன்,பாராளுமன்ற உறுப்பினரின் மட்டக்களப்பு இணைப்பாளர் டினேஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

(Visited 16 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!