முதலிடத்தை பிடித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
மக்கள் மத்தியில் ஆதரவு பெருகிவரும் அரசியல் வாதிகளின் பட்டியலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முதலிடத்தை பிடித்துள்ளார் .
கட்சிகளின் பட்டியலில் தேசிய மக்கள் சக்தி முதலிடத்தில் உள்ளது எனவும் தெரியவந்துள்ளது.
சமகால அரசியல் நிலைவரம் மற்றும் மக்களின் நிலைப்பாடு என்னவாக உள்ளது என்பது தொடர்பில் அரச நிறுவனமொன்று அண்மையில் நடத்திய கருத்து கணிப்பிலேயே இவ்விடயம் தெரியவந்துள்ளது.
இதற்கமைய அரசியல்வாதிகளுள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு 33 வீதமானோரும், அநுரகுமார திஸாநாயக்கவுக்கு 16 வீதமானோரும், சஜித் பிரேமதாசவுக்கு 12 வீதமானோரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கட்சிகளுக்கான செல்வாக்கு பட்டியலில் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி முன்னிலையில் உள்ளது. மக்கள் மத்தியில 21 சதவீத ஆதரவு கிடைத்துள்து. ஐக்கிய மக்கள் சக்திக்கு 17 வீதமும், மொட்டு கட்சிக்கு 15 வீதமும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு 11 வீதமும் மக்கள் மத்தியில் ஆதரவு உள்ளதென கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
- ‘ஹொலிகொப்டர்’ கூட்டணிக்கு 5 சதவீத ஆதரவும், சுதந்திரக்கட்சிக்கு 4 சதவீத ஆதரவு கிட்டியுள்ளது. சுமார் 24 வீதமானோர் கட்சி சார்பற்ற கொள்கையில் இருப்பதாக தெரியவந்துள்ளது.