ஜனாதிபதி ரணில் மற்றும் பசில் நாளை சந்திப்பு!! தேர்தல் குறித்து பேச்சு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் நாளை சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்கள் உள்ளிட்ட அரசியல் விவகாரங்கள் தொடர்பிலான விடயங்கள் அங்கு கலந்துரையாடப்படவுள்ளன.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொதுத் தேர்தலை முன்கூட்டியே நடத்துவது அரசியல் ரீதியாக சாதகமானது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.





