இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பதவி விலகல்
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) தலைவர் பதவியில் இருந்து ஜனாதிபதி சட்டத்தரணி கௌசல்ய நவரத்ன உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இராஜினாமா செய்துள்ளார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) பார் கவுன்சில் தலைவர் கௌசல்யா நவரத்னவை ராஜினாமா செய்யுமாறு ஏகமனதாக தீர்மானித்தது.
இதன்படி, BASL இன் தலைவர் பதவியில் இருந்து கௌசல்யா நவரத்னவை இராஜினாமா செய்வதற்கான யோசனைக்கு பார் கவுன்சில் கூட்டத்தில் ஏகமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மே 18 அன்று, BASL பார் கவுன்சில், இலங்கையில் ஒரு வெளிப்படையான மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த வணிக சூழலை (ஊழல் எதிர்ப்பு) மேம்படுத்துவது தொடர்பான JICA நிதியுதவியுடன் BASL திட்டம் தொடர்பான குற்றச்சாட்டுகளை ஆராய்வதற்காக ஐந்து பேர் கொண்ட விசாரணைக் குழுவை நியமித்தது.
ஜனாதிபதி சட்டத்தரணி கௌசல்யா நவரத்ன இந்த ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) தலைவராக மீண்டும் பதவி வகித்தார்.