விமர்சனங்களை எழுப்பியுள்ள அதிபர் மேக்ரானின் குத்துச்சண்டை புகைப்படங்கள்..
பிரான்ஸ் அதிபர் மேக்ரான் குத்துச்சண்டை செய்வது போன்ற சில புகைப்படங்களை அவரது அதிகாரப்பூர்வ புகைப்பட கலைஞர் சோசிக் டி லா மொய்சோனியர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில், ஒரு படத்தில் மேக்ரான் உறுதியான முகபாவத்தில் பற்களை கடித்து கொண்டிருப்பது போன்றும், மற்றொரு படத்தில் அவர் குத்துசண்டையில் கவனம் செலுத்துவதையும் காணமுடிகிறது.
சமீப காலமாக மேக்ரான் ரஷ்யாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் நிலையில் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பெரும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. நெட்டிசன்கள் பலரும் மேக்ரானை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
(Visited 19 times, 1 visits today)





