இலங்கையில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தயார் – பொது மக்களுக்கு விசேட அறிவிப்பு
இலங்கையில் அமைதி காலப்பகுதியில் தேர்தல் பிரசாரங்களைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ இது தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த காலப்பகுதியில் பிரசாரங்களை முன்னெடுப்பவர்களுக்கு எதிராகத் தேர்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேநேரம், வாக்களிப்பு நிலையங்களுக்குக் கொண்டு செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள கைப்பேசி உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்வதைத் தவிர்க்குமாறு அவர் கோரியுள்ளார்.
பொதுத் தேர்தல் தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக நேரடியாக 64,000க்கும் அதிகமான காவல்துறையினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், 3,200 பொலிஸ் அதிரடிப்படையினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலதிகமாக இராணுவத்தினரும், சிவில் பாதுகாப்பு படையினரும் பாதுகாப்புக்காகத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.