மறைந்த நடிகர் விஜயகாந்த் சார்பில் விருதை பெற்ற பிரேமலதா

டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு விருது வென்றவர்களுக்கு பத்ம விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.
மறைந்த நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டு இருந்தது. இன்று நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் விஜயகாந்த் சார்பில் கலந்து கொண்ட பிரேமலதா விஜயகாந்த் குடியரசு தலைவரிடம் விருதை பெற்றுக் கொண்டார்.
(Visited 31 times, 1 visits today)