அமெரிக்காவில் சக்திவாய்ந்த மில்டன் சூறாவளி தாக்கும் அபாயம் – மக்களை பாதுகாக்க முயற்சி

அமெரிக்காவில் ஆபத்தான சூறாவளி தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை 10 நாட்களுக்கு முன் தாக்கிய ஹெலன் சூறாவளியால் 25 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், தற்போது அதைவிட சக்திவாய்ந்த மில்டன் சூறாவளி புளோரிடாவை தாக்க வருவதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மணிக்கு 250 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் சூறை காற்றுடன் புளோரிடாவை நோக்கிவரும் மில்டன் சூறாவளி, ஹெலன் சூறாவளியை விட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் என அம்மாநில கவர்னர் எச்சரித்துள்ளார்.
வெள்ள பாதிப்புகளிலிருந்து தற்காத்து கொள்ள மணல் மூட்டைகளை ஆயத்தம் செய்யும் பணிகளை மக்கள் மேற்கொண்டுவருகின்றனர்.
Related posts:
”தோடுகளை விற்றேன், எனது கனவும் கலைந்தது” : வாக்குமூலம் வழங்கிய செவ்வந்தி!
October 19, 2025இலங்கையில் திடீரென சரிந்த தங்கத்தின் விலை : ஏற்றத்திற்கான காரணம் என்ன?
October 18, 2025சீனா மீது 500 சதவீதம் வரி விதிக்கும் ட்ரம்பின் திட்டத்திற்கு அனுமதி வழங்க தயாராகும் செனட்டர்கள்
October 16, 2025பிரித்தானிய கடவுச்சீட்டில் ஏற்படப்போகும் புதிய மாற்றம்
October 11, 2025(Visited 8 times, 1 visits today)