பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – உறுதி செய்த அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்
தெற்கு பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் இன்று (03) அதிகாலை 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
மிண்டனாவ் தீவின் கிழக்கே பார்சிலோனா கிராமத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் 17 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
உயிரிழப்போ, உடமைச் சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை என்று அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர், ஆனால் நில அதிர்வுகள் குறித்து எச்சரித்துள்ளனர்.





