ஆஸ்திரேலிய விமான நிலையத்தில் வெடித்த பவர் பேங்கால் பரபரப்பு
ஆஸ்திரேலியாவின் விமான நிலையங்களில் ஒன்றில் பவர் பேங்க் வெடித்ததின் காரணமாக ஒருவர் காயமடைந்துள்ளார்.
மெல்போர்ன் விமான நிலையத்தில் உள்ள குவாண்டாஸ் வணிக பகுதியில் இருந்த நபர் ஒருவனே காயமடைந்துள்ளார்.
குறித்த பவர் பேங்கை தனிப்பட்ட முறையில் வைத்திருந்த நிலையில், அது வெடித்தது. இதன் காரணமாக விரல்கள் மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தின் போது சுமார் 150 பேர் அந்தப் பகுதியில் அமர்ந்திருந்ததாகவும், அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் விமான நிறுவனங்கள் தங்கள் பவர் பேங்க் மற்றும் பேட்டரி கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது.
எமிரேட்ஸ் விமானங்களில் பயணிகள் பவர் பேங்க்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்துள்ளது.
அதேபோன்று அண்மையில் விர்ஜின் ஆஸ்திரேலியா பயணிகளுக்கு பவர் பேங்க்களை எட்டாதவாறு வைத்திருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன் எதிர்வரும் வாரங்களில் பவர் பேங்க் பயன்பாடு தொடர்பில் கட்டுப்பாடுகளை அறிவிக்கவுள்ளதாக குவாண்டாஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, லித்தியம் பேட்டரி தீயை அணைப்பது பெரும்பாலும் கடினம் என்றும், தண்ணீரால் கூட கட்டுப்படுத்த முடியாது என்றும் தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





