போப் பிரான்சிஸுக்கு தொடா்ந்து சிகிச்சை – சிக்கலான நிலையில் நோய் நிலைமை

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கத்தோலிக தலைமை மதகுரு போப் பிரான்சிஸுக்கு (88) தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், அவரது நோய் சிக்கலான நிலையில் இருப்பதாகவும் வாடிகன் தெரிவித்துள்ளது.
மூச்சுக் குழாய் அழற்சி (பிராங்கைடஸ்) பாதிப்புக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிறுவயதிலேயே ஒரு நுரையீரல் அகற்றப்பட்ட போப் பிரான்சிஸுக்கு நீண்ட காலமாகவே உடல்நலப் பிரச்னைகள் இருந்துவருகின்றன.
இந்த நிலையில், பிராங்கைடஸ் அறிகுறிகள் முற்றி ரோம் நகரின் ஜெமிலி மருத்துவமனையில் அவா் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.
(Visited 8 times, 1 visits today)