விளையாட்டு

டி-20 அரங்கில் 14,000 ரன் அடித்த போலார்டு

டி-20′ அரங்கில் 14,000 ரன் என்ற மைல்கல்லை எட்டினார் போலார்டு.

வெஸ்ட் இண்டீசில் கரீபியன் பிரிமியர் லீக் ‘டி-20’ தொடர் நடக்கிறது. தரவுபாவில் நடந்த போட்டியில் பார்படாஸ் ராயல்ஸ், டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய பார்படாஸ் அணிக்கு ரூதர்போர்டு (45), கதீம் (41), கேப்டன் ராவ்மென் பாவெல் (31) கைகொடுத்தனர். 20 ஓவரில் 178/6 ரன் எடுத்தது. ரசல் 3 விக்கெட் சாய்த்தார்.

அடுத்து களமிறங்கிய டிரின்பாகோ அணிக்கு முன்ரோ, 44 பந்தில் 67 ரன் எடுத்தார். கேப்டன் நிக்கோலஸ் பூரன் தன் பங்கிற்கு அரைசதம் அடித்தார். 17.5 ஓவரில் 179/3 ரன் எடுத்து, 7 விக்கெட்டில் வெற்றி பெற்றது. பூரன் (40 பந்து, 65 ரன்), போலார்டு (19) அவுட்டாகாமல் இருந்தனர்.

இதையடுத்து போலார்டு, ‘டி-20’ அரங்கில் 14,000 ரன் (712 போட்டி) என்ற மைல்கல்லை எட்டினார். இந்த இலக்கை எட்டிய இரண்டாவது வீரர் ஆனார். முதலிடத்தில் வெஸ்ட் இண்டீசின் கெய்ல் (463ல் 14,562 ரன்) உள்ளார். அடுத்த 4 இடத்தில் அலெக்ஸ் ஹேல்ஸ் (507ல் 13,931, இங்கிலாந்து), வார்னர் (424ல் 13,595, ஆஸி.,), சோயப் மாலிக் (557ல் 13,571, பாக்.,), கோலி (414ல் 13,543) உள்ளனர்.

(Visited 1 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ