வடகொரியாவில் கிம்மின் மகளை சுற்றி நகரும் அரசியல் விவகாரங்கள் – புலனாய்வாளர்கள் தகவல்!
வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன், தனது 11 வயது மகள் கிம் ஜு ஏவை தனது வாரிசாக கொண்டு நிகழ்வுகளை நடத்தி வருவதாக தென் கொரிய புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் இராணுவ அணிவகுப்பில் கிம் ஜு கலந்துகொண்டதை தொடர்ந்து மீண்டும் கவனம் பெற்றுள்ளார்.
தந்தை-மகள் இருவரும் பெருமையுடன் இராணுவ மரியாதையைப் பெற்றனர், அதே நேரத்தில் ஒரு டசனுக்கும் மேற்பட்ட உயர்மட்ட வட கொரிய அதிகாரிகள் முழு சீருடையில் பின்னால் நின்றனர்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள குக்மின் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆண்ட்ரே லாங்கோவ், “குழந்தையைப் போன்ற ஒரு இடத்தில் அவர் ஒருபோதும் சித்தரிக்கப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும், ஒரு சாதாரண தந்தை தனது 10 வயது மகளை எங்கும் அழைத்துச் செல்ல மாட்டார்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.