பிரித்தானியாவில் விற்பனைக்கு விடப்பட்டுள்ள பொலிஸ் நிலையம் – விளம்பரத்தால் குழப்பம்

பிரித்தானியாவில் உள்ள Sutton Coldfield பொலிஸ் நிலையம் விற்பனைக்கு விடப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பிரித்தானியாவில் பிரபல வீடுகளை விற்கும் Rightmove தளத்தில் அது குறித்து விளம்பரம் வந்துள்ளது.
அந்த இடம் மிகவும் பெரிதாக உள்ளதால் அதை விற்க முடிவெடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
அங்குள்ள பொலிஸ் நிலையம் வேறு ஒரு இடத்திலிருந்து செயல்படும் என்று பொலிஸ் தலைமை அதிகாரி கூறியுள்ளார்.
அந்த இடம் பொலிஸாருக்கு ஏற்புடையதாக இருக்கும், செலவும் குறைவாக இருக்கும் என்று அவர் கூறினார்.
தற்போது இருக்கும் பொலிஸ் நிலையம் விற்கப்படுவதற்கு முன்னர் பொலிஸார் புதிய இடத்துக்கு மாறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தளத்தில் பொலிஸ் நிலையத்தின் விலை குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
(Visited 22 times, 1 visits today)