இலங்கையில் பாதாள உலக குழுக்களை ஒடுக்க தயாராகும் பொலிஸார்!

இலங்கையில் பாதாள உலக குழுக்களை ஒடுக்குவதற்கு தெளிவான வேலைத்திட்டமும் திட்டமும் இருப்பதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்தார்.
இந்த வேலைத்திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள பதில் பொலிஸ் மா அதிபர், இதன் முடிவுகளை எதிர்வரும் காலங்களில் பார்க்கலாம் என தெரிவித்தார்.
நேற்று காலை தலதா மாளிகையை வழிபட வந்த போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பதில் பொலிஸ் மா அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
(Visited 12 times, 1 visits today)