22 பேரின் உயிரை பறித்த விபத்து – விசேட விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்

கோத்மலை, கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் இயந்திரக் கோளாறா என்பதை கண்டறிய சிறப்பு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
விபத்து குறித்து கொத்மலை போலீசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 5 times, 5 visits today)