பேராதனையில் மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணியின் மீது பொலிஸார் கண்ணீர் புகை
பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை பிரயோகித்ததால் இன்று மாலை பேராதனையில் பதற்றமான சூழல் நிலவியது.
சமூக ஊடக தணிக்கை சட்டத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும், தனியார் பல்கலைக்கழகங்கள் மூலம் மருத்துவப் பட்டம் வழங்குவதைத் தடை செய்ய வேண்டும், பல்கலைக்கழக முதன்மை பாதுகாப்பு அதிகாரியை பதவி நீக்கம் செய்ய வேண்டும், அவர் மீது முறையான விசாரணை நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
மேலும் வாழ்க்கைச் சுமைக்கு ஏற்ப மஹாபொல உதவித் தொகையை உடனடியாக அதிகரிக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பேராதனை ஓய்வறைக்கு அப்பால் பேரணி செல்ல முற்பட்ட போது, ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகத்தை மேற்கொண்டனர்.