இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் எல்லைகளை மூடிய பொலிஸார் : 1600 பேர் அதிரடியாக கைது!
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளில் 1,600க்கும் மேற்பட்டோர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
எல்லைகள் மூடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை நடவடிக்கைகளில் போதைப்பொருள்கள், 557 ஆயுதங்கள் மற்றும் நான்கு XL புல்லி நாய்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இங்கிலாந்து சட்டவிரோத மருந்து சந்தையில் சிலரின் விரும்பத்தகாத செயற்பாடுகளை தொடர்ந்து இந்த திடீர் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தேசிய காவல்துறைத் தலைவர்கள் கவுன்சிலின் (NPCC) கூற்றுப்படி, போதைப் பொருள் பரிவர்த்தனைக்காக குழந்தைகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இதயமற்ற கும்பல் இளைஞர்களை குற்ற வாழ்க்கைக்கு இழுப்பதை நிறுத்த நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என பிரித்தானியாவின் காவல் துறை அமைச்சர் டேம் டயானா ஜான்சன் தெரிவித்துள்ளார்.