ஆல்ப்ஸ் மலையில் காணாமல் போன அறுவரை தீவிரமாக தேடும் பொலிஸார்!
சுவிஸ் ஆல்ப்ஸ் மலையில் காணாமல்போன அறுவரை தேடும் பணிகள் முடக்கிவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடினமான காலநிலையில் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இத்தாலியின் எல்லைக்கு அருகில் உள்ள செர்மாட் ரிசார்ட்டுக்கும் அரோலா கிராமத்திற்கும் இடையே தேடுதல் நடவடிக்கை தொடங்கியதாக வாலாஸ் மாகாணத்தில் உள்ள போலீசார் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.
“இந்தக் குழு சனிக்கிழமையன்று Zermatt இல் தனது சுற்றுப்பயணத்தைத் தொடங்கியது, பின்னர் Tête Blanche பகுதியில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





