ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை அடுத்து காஷ்மீரில் நடைபெறும் பிரதமர் மோடியின் பிரச்சாரம்
வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் சக்-இ-தாப்பர் கிராமத்தை பாதுகாப்புப் படையினரின் குழு சுற்றி வளைத்த பிறகு, தொடங்கிய துப்பாக்கிச் சண்டையில் மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி தோடாவில் இருந்து தொடங்குவதற்கு முன்பு இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள 90 சட்டப்பேரவைகளுக்கு மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. செனாப் பள்ளத்தாக்கில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கு செப்டம்பர் 18 அன்று முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
கடந்த 42 ஆண்டுகளில் காஷ்மீர் மாநிலம் டோடாவுக்கு செல்லும் முதல் பிரதமராக மோடி இருக்கிறார். பிரதமரின் வருகையை ஒட்டி காஷ்மீரில் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், கிராமத்தில் தீவிரவாதிகள் இருப்பதாக உளவுத்துறை தகவல்களுக்குப் பிறகு, ஜம்மு காஷ்மீர் போலீஸ், ராணுவத்தின் 29 ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் (ஆர்ஆர்) மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஆகியவற்றின் கூட்டுக் குழு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
அப்போது அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பதிலுக்கு படைகளும் துப்பாக்கிச் சூடு நடத்தியது.
இருள் சூழ்ந்ததால் நிறுத்தப்பட்ட சண்டை, சனிக்கிழமை அதிகாலை மீண்டும் தொடங்கியது. கொல்லப்பட்ட மூன்று தீவிரவாதிகளும் பள்ளி கட்டிடம் ஒன்றின் அருகே பதுங்கியிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த 2014ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தேர்தல்களில், இந்த 6 சட்டமன்ற தொகுதிகளில் நான்கில் பாஜக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.