விமான நிலையம் சென்று கத்தார் அதிபரை வரவேற்ற பிரதமர் மோடி

இந்தியா வந்துள்ள கத்தார் அதிபர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்தானியை விமான நிலையம் சென்று பிரதமர் மோடி வரவேற்றுள்ளார்.
பிரதமரின் அழைப்பை ஏற்று இரு நாள் அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ள கத்தார் அதிபர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்தானி இந்தியா வந்திறங்கினார்.
தனி விமானம் மூலம் வந்த கத்தார் அதிபரை பிரதமர் மோடி விமான நிலையத்திற்கே சென்று கட்டிதழுவி வரவேற்றார். இது போன்று விமான நிலையம் சென்று வெளிநாட்டு தலைவரை மோடி வரவேற்றது அரிய நிகழ்வாக கூறப்படுகிறது.
நாளை ஜனாதிபதி திரவுதிமுர்முவை சந்தித்து பேசுகிறார். இரு நாடுகளிடையே பரஸ்பரம், வர்த்தகம், சர்வதேச அரசியல் சூழ்நிலை, இஸ்ரேல்-ஹமாஸ் போர் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளார்.
தவிர முதலீடு, எரிசக்தி, தொழில்நுட்பம், கலாச்சாரம் மற்றும் இந்தியா-கத்தார் இடையிலான உறவுகள் குறித்தும் ஆலோசனை நடத்துகிறார்.