மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி அஞ்சலி
மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
நமது நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்திய திரு மோடி, அவர்களின் சேவை மற்றும் தியாகங்களை நினைவு கூர்ந்துள்ளார்.
மேலும், சமூக ஊடக எக்ஸ் தளத்தில் “பூஜ்ய பாபுவின் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது கொள்கைகள் வளர்ந்த இந்தியாவை உருவாக்க நமக்கு உத்வேகம் அளிக்கின்றன. நம் நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த அனைவருக்கும் நான் அஞ்சலி செலுத்துகிறேன். அவர்களின் சேவை மற்றும் தியாகங்களை நினைவு கூர்கிறேன்.” என பதிவிட்டிருந்தார்.
(Visited 10 times, 1 visits today)





