வடகொரிய ஜனாதிபதியை மகிழ்ச்சிப்படுத்த இன்ப குழு!! வெளியான அதிர்ச்சி தகவல்
வடகொரிய ஜனாதிபதி தன்னை மகிழ்ச்சிப்படுத்த இன்ப குழு வைத்துள்ளதாகவும், அந்த குழுவிற்கு வருடந்தோறும் 25 கன்னிப் பெண்கள் தேர்ந்தெடுத்து அனுப்பப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகொரியாவில் இருந்து தப்பி வெளிநாட்டிற்கு வசித்து வரும் இளம் பெண் ஒருவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனை தெரிவித்துள்ளார்.
அழகான பெண் கிடைக்கவில்லை என்றால், பாடசாலைகளுக்குச் கூட சென்று ஒவ்வொரு வகுப்பறையாக சென்று பார்வையிடுவார்கள்.
ஒரு வழியாக அவர்கள் அழகான பெண்களை கண்டுபிடித்து விட்டால், அவர்களுடைய முதல் விசயம் அவர்களுடைய குடும்பம் குறித்து விசாரிப்பதுதான்.
அந்த பெண்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வடகொரியாவில் இருந்து வெளியேறி இருந்தால் அல்லது சொந்தக்காரர்கள் தென்கொரியா அல்லது மற்ற நாடுகளில் வசித்து வந்தால் அவர்களை நிராகரித்து விடுவார்கள்.
ஒரு பெண் தேர்வு செய்யப்பட்டு விட்டால், அந்த பெண் கன்னித்தன்மையுடன் இருக்கிறாரா? என்பதை அறிய மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்.
இந்த பரிசோதனையின் போது சிறிய குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டாலும், அவர்கள் தேர்வாகாமல் இருப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது.
இந்த கொடூரமான பரிசோதனைக்குப் பிறகு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சில பெண்கள் பியாங்யாங் அனுப்பப்படுவார்கள். அங்கு அவர்களுடைய ஒரே நோக்கம் சர்வாதிகாரியான கிம் ஜாங் உன்னை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்பதுதான்.
இன்ப குழு மூன்று தனித்தனி குழுவாக பிரிக்கப்படும். ஒரு குழுவிற்கு மசாஜ் பயிற்சி அளிக்கப்படும். மற்றொரு குழு பாட்டுப் பாட வேண்டும். நடனமாட வேண்டும்.
மூன்றாவது குழு சர்வாதிகாரி மற்றும் மற்ற நபர்களுடன் பாலியல் நெருக்கத்துடன் இருக்க வேண்டும். இவர்களை எப்படி மகிழ்விப்பது என்பதை அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும், அதுதான் அவர்களின் ஒரே குறிக்கோள்.
மிகவும் கவரக்கூடிய வகையிலான கவர்ச்சிகரமான பெண்கள் சர்வாதிகாரிக்கு சேவை செய்ய தேர்வு செய்யப்படுவார்கள். மற்றவர்கள் குறைந்த நிலை அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளை திருப்பிப்படுத்த ஒதுக்கப்படுவார்கள்.
இந்த குழுவில் உள்ள பெண்கள் சுமார் 25 வயதை தொடும்போது, அவர்களின் பணிவிடை காலம் முடிவடைந்துவிடும். அந்த பெண்களில் சிலர் தலைவர்களின் பாதுகாவலர்களை திருமணம் செய்து கொள்வது உண்டு” என அவர் குறிப்பிட்டுள்ளார்.