வெசாக் அலங்காரங்களுக்கு பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ளது

எதிர்வரும் வெசாக் காலத்தில் பிளாஸ்டிக்கை பல்வேறு அலங்காரங்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என மத்திய சுற்றாடல் அதிகார சபை மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
சந்தையை அவதானிக்கும் போது, பொலித்தீன் பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்ட வெசாக் அலங்காரங்கள் பலவற்றை இக்காலத்தில் காணக்கூடியதாக இருக்கின்றது.
அவ்வாறான பொருட்களுக்கு மாற்றீடாக பல சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் இருப்பதால், அவற்றைப் பயன்படுத்துமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.
2017ஆம் ஆண்டு அரசாங்கம் வெளியிட்ட வர்த்தமானியின் பிரகாரம் பொலித்தீன் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.
(Visited 22 times, 1 visits today)