இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடத்த திட்டம் – தீவிர நடவடிக்கையில் அரசாங்கம்
இலங்கையில் ஜனாதிபதி தேர்தலை இவ்வருடத்துக்குள் நடத்தி முடிப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது.
அதற்கான நடவடிக்கைகளை அரசு செய்துவருகின்றதென நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
ஜனாதிபதி தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டால், அதற்கு தேவையான சட்ட திருத்தங்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதற்கு தாம் தயார் என எதிரணிகள் அறிவித்துள்ளன.
இந்நிலையிலேயே அதற்கான சட்ட திருத்தத்தை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன.
சர்வதேச நாணய நிதியத்தின் 2ஆவது கடன் தவணை எதிர்வரும் செப்டம்பரில் கிடைக்கப்பெறவுள்ளது. அதன்பின்னர் நாட்டு மக்களுக்கு விசேட சலுகைகள் வழங்கப்படவுள்ளன. சாதகமான நிலை நீடிக்கும் நிலையில் தேர்தலுக்கு சென்றால் சிறப்பு என அரசு கருதுகின்றது.
(Visited 8 times, 1 visits today)