எடின்பர்க்கில் (Edinburgh) இருந்து புறப்பட்ட விமானம் எரிபொருள் லொறியுடன் மோதி விபத்து!
எடின்பர்க்கில் (Edinburgh) இருந்து ஃபாரோவுக்குச் (Faro) சென்ற ரியானேர் விமானம் (Ryanair flight) எரிபொருள் லொறியுடன் மோதி நேற்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
போயிங் 737-8 விமானத்தின் இறக்கை முனை வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்திலிருந்து பயணிகள் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டதாகவும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் விமான நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தால் திட்டமிடப்பட்ட புறப்பாடு இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமானதுடன், பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.





