வொஷிங்டனுக்குச் சென்றுகொண்டிருந்த போது நடுவானில் தடுமாறிய விமானம் – 38 பேர் காயம்
நைஜீரியாவிலிருந்து வொஷிங்டனுக்குச் சென்றுகொண்டிருந்த United Airlines விமானம் நடுவானில் தடுமாறியதால் 38 பேர் காயமடைந்துள்ளனர்.
தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்த போதிலும் என்ன நடந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
விமானம் மீண்டும் நைஜீரிய விமான நிலையத்திற்குத் திருப்பிவிடப்பட்டது. அதில் இருந்த 6 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அவர்கள் கடுமையாகக் காயமுற்றதாக நைஜீரியாவின் மத்திய விமான நிலையங்கள் ஆணையம் X தளத்தில் குறிப்பிட்டுள்ளது.
மேலும் 32 பேருக்கு இலேசான காயங்கள் ஏற்பட்டன. அவர்களுக்கு முதலுதவி வழங்கப்பட்டதாக ஆணையம் கூறியது.
விமானத்தில் மொத்தம் 256 பேர் இருந்தனர். அடிபட்டோரில் விமான ஊழியர்களும் அடங்குவர். எனினும் விமானம் பெரிதாக சேதமடையவில்லை.
இந்நிலையில் என்ன நடந்தது என்பதைக் கண்டறிய நைஜீரிய அதிகாரிகளும் அமெரிக்க அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
United Airlines அதற்கு ஒத்துழைப்பதாகக் கூறியுள்ளது.