திருகோணமலையில் நடந்த விமான விபத்து – PT6 விமானங்கள் பறப்பதற்கு தடை

அனைத்து PT – 6 பயிற்சி விமானங்களின் பறப்பதை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு இலங்கை விமானப்படை தீர்மானித்துள்ளது.
திருகோணமலையில் நேற்று விமானம் விபத்துக்குள்ளானதில் இரண்டு விமானப்படை அதிகாரிகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.
இந்த விசேட குழுவின் அறிக்கை வரும் வரை இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் குரூப் கப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இன்று நாடாளுமன்றத்திலும் விமான விபத்து குறித்து கருத்துக்கள் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 12 times, 1 visits today)