விமான விபத்து – ஒரே நாளில் பயணத்தை இரத்து செய்த 68,000 பயணிகள்

தாய்லாந்திலிருந்து 181 பேருடன் வந்துகொண்டிருந்த ஜெஜு ஏர் விமானம் தென்கொரிய விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விபத்திற்குள்ளானது.
விபத்தில் 179 பேர் பலியானது உலக அளவில் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஒரே நாளில் விமான விபத்தில் சிக்கிய ஜெஜு விமான நிறுவனத்தில் முன்பதிவு செய்திருந்த சுமார் 68 ஆயிரம் பேர் தங்களது பயணங்களை இரத்து செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதில் 33 ஆயிரம் பேர் உள்ளூர் பயணங்களையும், 34 ஆயிரம் பேர் வெளிநாட்டு பயணங்களையும் ரத்து செய்துள்ளனர் என ஜெஜு விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
(Visited 48 times, 1 visits today)