இலங்கையில் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டால் நாடாளுமன்றத்தை கலைக்க திட்டம்!
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தில், அமைச்சின் செலவினத் தலையீடுகள் தோற்கடிக்கப்படுமாயின், வரவு செலவுத் திட்டம் முடிவடைந்ததன் பின்னர் நாடாளுமன்றத்தைக் கலைப்பது தொடர்பில் அரசாங்கத்தின் உயர்பீடம் கவனம் செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரவு செலவுத் திட்டத்தை இரண்டாம் வாசிப்பில் தோற்கடிக்காமல், வரவு செலவுத் திட்டக் குழுவின் போது அரசாங்கத்துடன் தொடர்புடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக செயற்பட்டால் நாடாளுமன்றத்தைக் கலைக்கத் தயார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக வரவு செலவு திட்டம் வாக்கெடுப்பிற்கு விடப்படும்போது திட்டத்திற்கு எதிராக வாக்களிப்பது தொடர்பில் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இரகசிய கலந்துரையாடலில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பொதுஜன பெரமுனவின் அரசாங்கத்துடன் தொடர்புடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கும் பல அமைச்சர்களுக்கும் இடையில் சில கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளதால் இந்த இந்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2024ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நவம்பர் 13ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.