ஐரோப்பா

திருமணத்திற்காக மார்பக அறுவை சிகிச்சை செய்த பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!

இத்தாலியைச் சேர்ந்த இளம் பெண்ணொருவர் மார்பகத்தை பெரிதாக்க அறுவை சிகிச்சை மேற்கொண்ட பின்னர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அலெசியா நெபோஸோ (21) எனும் இத்தாலியைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணர், தனது நீண்ட நாள் காதலரான மரியோ லுச்சேசியை திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தார். ஆனால், அவர் தனது மார்பகங்கள் சிறிதாக இருப்பதாக எண்ணி கவலையுற்றுள்ளார். மேலும், திருமணத்தன்று Low-cut திருமண உடையில் தோன்ற வேண்டும் என்பது அலெசியாவின் விருப்பமாக இருந்துள்ளது.

இதனால் அவர் மார்பக மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளார். அதன் பின்னர் சில நாட்களில் அலெசியாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. அவருக்கு அதிக காய்ச்சல், உடல் சோர்வு, இருமல் மற்றும் இரைப்பை குடல் பிரச்சனைகள் ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும் பரிதாபமாக உயிரிழந்தார். அலெசியாவின் குடும்பத்தினர் இதுதொடர்பாக புகார் அளித்ததைத் தொடர்ந்து, பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!