அமெரிக்காவில் பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்டவர் மரணம்
அமெரிக்காவில் பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்டவர் உயிரிழந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
மரபணுக் கூறுகள் மாற்றப்பட்ட பன்றி சிறுநீரகம் பெற்றுக்கொண்ட நோயாளியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
Massachusetts பொது மருத்துவமனையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து 2 மாதங்கள் ஆகின்றன.
அப்போது அந்த 62 வயது நோயாளி Rick Slayman இறுதிக் கட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
உலகிலேயே முதல் முறையாக உயிருடன் இருக்கும் நோயாளிக்கு அத்தகைய உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அறுவை சிகிச்சை காரணமாகத்தான் Rick Slayman எந்த ஆதாரமும் இல்லை என்று மருத்துவமனை தெரிவித்தது.
உறுப்பு தானத்துக்கான பற்றாக்குறை உலகெங்கும் ஒரு தீராப் பிரச்சினையாக உள்ளது.
மார்ச் மாத நிலவரப்படி 1,400க்கும் அதிகமான நோயாளிகள் சிறுநீரக தானத்துக்காகக் காத்துக்கொண்டிருப்பதாக Massachusetts பொது மருத்துவமனை தெரிவித்தது.