யாழ்ப்பாணத்தில் வைத்தியர்கள் வீடுகள் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்

யாழ்ப்பாணம் கந்தர்மடம் பழம் வீதியில் உள்ள மருத்துவர்கள் இருவரின் வீடுகள் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு 10.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்டது என யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனத் தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாகத் தெரிவித்தனர்.
காணி பிணக்கு காரணமாகாவே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக ஆரம்ப விசாரணைகளில் தெரிய வருவதாகவும் பொலிஸார் கூறினர்.
(Visited 18 times, 1 visits today)