பிரான்ஸில் நபருக்கு கிடைத்த அதிஷ்டம் – ஒரே இரவில் கிடைத்த 109 மில்லியன் யூரோக்கள்

பிரான்ஸில் நபர் ஒருவர் 109 மில்லியன் யூரோக்கள் பெரும்பணத்தை வெற்றியீட்டியுள்ளார்.
இந்த வாரம் இடம்பெற்ற EuroMillions அதிஷ்ட்டலாப சீட்டிழுப்பில் பிரெஞ்சு நபர் ஒருவர் இந்த வெற்றியை பெற்றுள்ளார்.
வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற இந்த குலுக்கலில் 35, 3, 37, 5, 4 ஆகிய இலக்கங்களும், நட்சத்திர இலக்கமாக 5 மற்றும் 6 ஆகிய இலக்கக்கங்களை கொண்ட சீட்டுக்கு அதிஷ்ட்டத் தொகை கிடைத்துள்ளது.
மேற்படி அதிஷ்ட்டச்சீட்டினை கொண்டுள்ளவர் அடுத்து வரும் 60 நாட்களுக்குள் தனக்கான வெற்றித்தொகையை பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த ஏப்ரல் மாதத்தில் நபர் ஒருவர் நூறு மில்லியன் யூரோக்களை வெற்றி பெற்றிருந்தபோதும் அவர் அத்தொகையை பெறுவதற்கு முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
(Visited 29 times, 1 visits today)