சிங்கப்பூரில் புதிய சட்டத்தினை அமுல்படுத்த அனுமதி!
சிங்கப்பூரல் புதிய சட்டத்தினை அமுல்படுத்த நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குடும்ப வன்முறைக்கு ஆளாவோரை மேலும் சிறந்த முறையில் பாதுகாக்கும் வகையில் இந்த சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
வெவ்வேறு விதத் துன்புறுத்தல்களை உள்ளடக்கும் வகையில் குடும்ப வன்முறையின் அர்த்தத்தைத் திருத்துவதும் அதில் அடங்கும். தனிநபர் பாதுகாப்பு ஆணைக்கு விண்ணப்பம் செய்வதற்கான வயது வரம்பு 18க்குக் குறைக்கப்படுகிறது.
குடும்ப வன்முறைச் சம்பவங்களின் எண்ணிக்கை உயரும் வேளையில் புதிய சட்டங்கள் வருகின்றன. சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு சென்ற ஆண்டு சுமார் 2,300 குடும்ப வன்முறை சம்பவங்களைக் கையாண்டது.
அதன் வன்முறை எதிர்ப்பு, பாலியல் அச்சுறுத்தல் உதவித் தொலைபேசி எண்ணுக்கு 10,000க்கும் அதிகமான அழைப்புகள் வந்தன.
வன்முறைக்கு ஆளாவோர் தங்களை இன்னும் சிறந்த முறையில் பாதுகாத்துகொள்வதற்குத் திருத்தப்பட்ட மாதர் சாசனம் உதவும் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டுத் துணையமைச்சர் Sun Xueling தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரமும் வழங்கப்படும். புதிய மாற்றங்கள் குடும்ப உறவுகளுக்கு மட்டும் பொருந்தும். குடும்பங்களுக்கு அப்பாற்பட்ட நெருக்கமான உறவுகளில் பாதுகாப்பை வலுப்படுத்தும் தனிப்பட்ட சட்டத்தை அமைச்சு ஆராய்வதாகத் Sun Xueling கூறினார்.