இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி – தயார் நிலையில் துறைமுகம்

இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதால், புதிய வாகனங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளது.
அதற்கமைய மிகவும் பாதுகாப்பான முறையில் வாகனங்களை இறக்குமதி செய்ய தயாராக இருப்பதாக ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வில்சன் குவா தெரிவித்தார்.
ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் 2018 முதல் உள்நாட்டு சந்தையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கும் ஏற்றுமதி செய்வதற்கும் முன்னோடியாக செயல்பட்டு வருகிறது.
வாகனங்களை இறக்குமதி செய்து பாதுகாப்பாக வைத்திருக்க தேவையான உள்கட்டமைப்பு வசதிகள், கப்பல் தளம் மற்றும் கப்பல்துறைக்கான அனுபவம் வாய்ந்த ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள், சிறப்பு பாதுகாப்பு வசதிகள் இருப்பதாக ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக தலைமை நிர்வாக அதிகாரி வில்சன் குவா தெரிவித்தார்.
(Visited 14 times, 1 visits today)